×

மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: மாநில மொழியில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்ற தலைமை நீதிபதி கருத்துக்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை: மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியின் இக்கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. நீதிமன்ற நடைமுறைகளையும், தீர்ப்புகளையும் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும், அவரவர் மொழியில் அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக, அந்தந்த மாநில மொழிகளே இருக்க வேண்டுமென அறிவிப்பதும் அவசியமாகும். எனவே, சாதாரண மக்களும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளும் வகையில், மாநில மொழிகளைப் பயன்படுத்தும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.


Tags : Supreme Court ,Kamal Haasan , Supreme Court verdict on state languages: Kamal Haasan welcomes
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...