×

தலைநகர் டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்..!!

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் கட்டங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். அதிர்வுகளை உணர்ந்து கட்டடங்களை விட்டு மக்கள் வெளியேறினர். 


Tags : Delhi , Capital Delhi, powerful earthquake
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு