முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை நான் வெற்றி பெற்றால் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனுக்காக போராடுவேன்-பாஜக எம்.எல்.சி. வேட்பாளர் வாக்குறுதி

சித்தூர் : சித்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில், எம்எல்சி வேட்பாளர் பிரம்மானந்தம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிவித்ததாவது:கிழக்கு ராயல் சீமா ஆசிரியர்கள் சங்கம் எம்எல்சி வேட்பாளராக பாரதீய ஜனதா கட்சி மேலிடம் என்னை அறிவித்துள்ளது. இதற்காக பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நெல்லூர் மாவட்டம் காவலி பகுதியை சேர்ந்தவர். கிழக்கு ராயல் சீமா ஆசிரியர்கள் சார்பில் எம்எல்சி வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

இதற்கு முன்பு எத்தனையோ ஆசிரியர்கள் சங்கம் சார்பில் எம்எல்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு ஜெயித்தார்கள். ஆனால் அவர்கள் ஒருவர் கூட சட்டசபைக்குச் சென்று ஆசிரியர்களின் நலனுக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் குரல் கொடுக்கவில்லை. என்னை  ஆசிரியர்கள் சங்க எம்எல்சி வேட்பாளராக வெற்றி பெற செய்தால் நான் ஆசிரியர்களின் நலனுக்காக பாடுபடுவேன்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாதயாத்திரையின்போது நான் முதலமைச்சரான உடன் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவையில் உள்ள டிஏபில், பிஆர்சி மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை அமுல்படுத்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். அவர் முதலமைச்சராக வெற்றி பெற்றவுடன் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை.

அதேபோல் ஆசிரியர்களுக்கு அவர்களின் ஊர்களுக்கு ஏற்ப பணி மாற்றம் செய்யப்படுவதில்லை. அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஊர்களுக்கு பணி மாற்றம் செய்கிறார்கள். இதனை தட்டி கேட்டால் ஆசிரியர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்கிறார்கள். அதே போல் ஆசிரியர்களுக்கு புதியதாக ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்து அந்த ஆப் மூலம் நாள்தோறும் பள்ளிகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

 சில பகுதிகளில் நெட்வொர்க் கிடைக்காமல் ஆசிரியர்கள் கைரேகை பதிவு செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்ததாக அதிகாரிகள் பதிவு செய்து அவர்களின் சம்பளத்தை கட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆசிரியர்கள் சங்கம் சார்பில் எம்எல்சியாக நான் போட்டியிடுகிறேன். எனக்கு கிழக்கு ராயல் சீமா அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் வெற்றி பெற்றவுடன் ஆசிரியர்களின் நலனுக்காகவும் பள்ளி மாணவ மாணவிகளின் நலனுக்காகவும் போராடுவேன். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வரை போராட்டம் நடத்துவேன். ஆந்திர மாநிலத்தில் கல்வித்துறை நன்றாக செயல்பட வேண்டும் என்றால் மாணவ மாணவிகளின் எதிர்காலம் நன்றாக செயல்பட வேண்டும் என்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 இதில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் சிட்டிபாபு, பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட தலைவர் குரு கணேஷ், எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் பாபு, ஏபியுஎஸ் ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாலாஜி, கவுரவ தலைவர் சுப்பிரமணி உள்பட ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: