×

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையின் 3வது கூட்டத்தொடர் பிப்.3ம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையின் 3வது கூட்டத்தொடர் பிப்.3ம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். மார்ச்சில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக இந்த கூட்டத்தொடர் கூட்டப்பட உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ். பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 21 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க தகுதியான குடும்ப தலைவிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் உதவித்தொகை பெற மாநிலம் முழுவதும் சுமார் 71 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது. இதற்காக அரசு முதற்கட்டமாக மாதம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று மாலை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக மாதிரி காசோலையை வழங்கினார். இந்தநிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பிப்ரவரி 3-ம் தேதி கூடுகிறது என்றும், மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்.

Tags : Speaker ,Selvam ,15th Legislative Assembly ,Puducherry , Speaker Selvam announced that the 3rd Session of the 15th Legislative Assembly of Puducherry will begin on 3rd February.
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...