×

சித்த மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் ஆஜரான ஷர்மிகாவிடம் விசாரனை: தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக குற்றசாட்டு.!

சென்னை: சித்த மருத்துவர் ஷர்மிகா அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் ஆஜராகியுள்ளார். ஒரு கப் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என ஷர்மிகா பேசியிருந்தார். பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி வந்த நிலையில் ஷர்மிகாவிடம் நேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சர்ச்சை கருத்துக்கள் குறித்து சித்த மருத்துவர் ஷர்மிகா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் ஆஜரான ஷர்மிகாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அறிவியல் ஆதாரங்களோடு தான் கருத்து கூறினாரா என்பது குறித்து சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முறைப்படி மருத்துவ குறிப்புகள் வழங்குவதற்கு அனுமதி மற்றும் பதிவு செய்துள்ளாரா எனவும் விசாரணை நடைபெறுகிறது.

குழந்தை பிறப்பு உள்ளிட்ட சர்ச்சை கருத்துகள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஷர்மிகா பேசிய மருத்துவ கருத்துக்கள் சித்த மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சித்த மருத்துவர் கனகவல்லி, மாநில மருந்து ஆய்வாளர் உட்பட 4 பேர் கொண்டு மருத்துவக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.



Tags : Ajaran Sharmika ,Siddhi Medical , Inquiry to Sharmika who appeared in Siddha Medical Director's office: Accused of giving wrong medical advice.!
× RELATED அரசு உரிமம் பெறாத போலி சித்த...