×

பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டம்

*பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கைபெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த மலைக்கோயிலை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இப்பாதையில் பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் செல்வது வழக்கம். நேற்று மாலை கிரிவலப்பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில், சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதி விவசாயிகள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பெரியகுளம் ஏடிஎஸ்பி முத்துக்குமார் மற்றும் தென்கரை பேரூராட்சி நிர்வாகம் சேர்ந்து கைலாசநாதர் மலைக்கோயிலின் கிரிவல பாதை பகுதிக்கு பொதுமக்கள், விவசாயிகள் மாலை நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக கைலாசநாதர் கோயில் காட்டுப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பு மற்றும் மாந்தோப்புகளில் வளர்க்கப்பட்டு வந்த நாய் உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தைகள் இரையாக்கி வருகின்றன. இதே பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். தற்போது அதேபோல் கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

The post பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,PUBERIAKULM ,Kailasapatti Temple ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...