×

முன் பக்கம் உட்கார வைத்துக் கொண்டு திருட்டு பைக்கில் காதல் ஜோடி ஆபாச சேட்டை: சட்டீஸ்கர் போலீஸ் அதிரடி கைது

துர்க்: சட்டீஸ்கரில் திருட்டு பைக்கில் முன்பக்கம் அமரவைத்துக் கொண்டு ஆபாசமான முறையில் பயணம் செய்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் காதல் ஜோடி பைக்கில் ெசன்றது. காதலன் பைக்கை ஓட்டிச் சென்ற போது, அவனுக்கு எதிரே முன்பக்கத்தில் காதலி அமர்ந்து கொண்டார். அவர் தனது காதலனை கட்டிப்பிடித்தவாறு அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது அதையடுத்து அந்த காதல் ஜோடியை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அபிஷேக் பல்லவ் கூறுகையில், ‘பைக்கை ஓட்டும் நபர், தனக்கு முன்பாக பெண் ஒருவரை அமரவைத்துக் கொண்டு ஆபாச செயல்களில் ஈடுபட்டவாறு சென்றார். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய மற்றும் ஆபாசமான முறையில் பைக்கில் சென்ற இருவரின் வீடியோ காட்சிகள் வைரலானது.

அதையடுத்து அவர்கள் இருவரையும் தேடி பிடித்து கைது செய்துள்ளோம். காதல் ஜோடி சென்ற பைக், திருட்டு பைக் என்பது தெரியவந்தது. அவர்களிடம் வாகனத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை. பைக் நம்பர் கூட இல்லை. கடந்த ஓராண்டிற்கு முன், ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை ரூ.9,000-க்கு வாங்கி உள்ளனர். தற்போது அந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Tags : Chattisgarh , Chattisgarh police arrested a couple who sat on the front side of a stolen bike
× RELATED 2 பெண் நக்சல் சுட்டுக்கொலை