×

கார், பைக் மீது லாரி மோதிய விபத்தில் 6 பாதசாரிகள் பலி

உன்னாவ்: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம், லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற லாரி, அவ்வழியாக சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவ்வழியாக நடந்து சென்ற 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  

இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி சசி சேகர் சிங் கூறுகையில், ‘லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் அச்சல்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆசாத் மார்க் கிராசிங் அருகே வேகமாக வந்த லாரி, அவ்வழியாக சென்ற கார் மற்றும் பைக் மீது மோதிய விபத்தில், அவ்வழியாக சென்ற 6 பேர் பலியாகினர். இதையடுத்து மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி, விபத்துக்கு காரணமான டிரைவரை கைது செய்துள்ளோம்’ என்றார்.

Tags : 6 pedestrians killed in an accident where a truck collided with a car and a bike
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...