நடிகை அதியா ஷெட்டி கே.எல்.ராகுல் திருமணம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்.  கர்நாடகத்தைச் சேர்ந்த 30 வயதான இவர் இந்தியா அணிக்காக இதுவரை 45 டெஸ்ட், 51 ஒன்டே மற்றும் 72 டி.20 போட்டிகளில் உள்ளார். இவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் நடிகை அதியா ஷெட்டி(30)யை காதலித்து வந்தார்.  இந்நிலையில் இவர்களின் திருமணம் மும்பை கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடக்கிறது. திருமண கொண்டாட்டங்கள் நேற்றிரவே  தொடங்கிவிட்டன. இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய  நண்பர்கள் முன்னிலையில் இன்று மாலை 4 மணிக்கு திருமணம் செய்துகொள்கின்றனர்.

திருமண சடங்குகளுக்குப் பிறகு, மாலை 6.30 மணிக்குள் திருமணம் நடக்கிறது. குடும்ப உறுப்பினர்களை தவிர ஒருசில பிரபலங்கள் மட்டும் திருமணத்தில்  கலந்துகொள்கின்றனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் கம்பீர், உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஆகியோரை ராகுல் திருமணத்திற்கு அழைத்துள்ளார். ரோகித்சர்மா, கோஹ்லி போன்ற வீரர்கள் நியூசிலாந்துடன் நாளை கடைசி ஒருநாள்  போட்டியில் ஆட உள்ளதால் பங்கேற்கவில்லை.

Related Stories: