சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பணியாற்றும் வகையில் தமாகா தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜி.ேக.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தேர்தல் பணிக்குழு தலைவராக, ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் நியமிக்கப்படுகிறார். அதேபோன்று, ஆறுமுகம், விடியல் சேகர், வி.யுவராஜா, சந்திரசேகர், கவுதமன், சண்முகம், பிரகாஷ் ஜெயின், மணியன், சி.சம்பத்குமார், சின்னுசாமி, சுந்தரசாமி, உழவன் கொற்றவேல், புவனேஸ்வரன், ரபீக், கதிர்வேல் ஆகிய 16 பேர் பணிக்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.