×

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பாஜ.வுக்கு தோல்வி: அகிலேஷ் யாதவ் பேச்சு

லக்னோ: உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜ தோல்வியை சந்திக்கும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். நாடு முழுவதற்குமான பொது தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜ.வின் 2 நாள் செயற்குழு கூட்டம் கடந்த வாரம் உபி.யில் நடந்தது.  இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ``அடுத்த 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய போவதாக கூறி வரும் கட்சி, முடிவுக்கான நாட்களை எண்ணிக் கொண்டுள்ளது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் மாநிலத்தில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் எத்தனை தொகுதிகளில் வெல்ல முடியும் என்பது அவருக்கு தெரியும். பாஜ தற்போது உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும்,’’ என்று தெரிவித்தார்.

Tags : BJP ,Uttar Pradesh ,Akhilesh Yadav , BJP lost in all 80 constituencies in Uttar Pradesh: Akhilesh Yadav speech
× RELATED போலி பேச்சு, பொய்யான வாக்குறுதி; 3ம்...