×

திரிபுராவில் எதிர்க்கட்சி கூட்டணியில் மம்தா கட்சி சேராது: திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

அகர்தலா: திரிபுரா சட்டமன்ற  தேர்தலில் காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் சேராது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. திரிபுராவில் முதல்வர் மாணிக் சாகா தலைமையில் பாஜ  ஆட்சி நடக்கிறது.  திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி  வரும்16ம் தேதி  சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட்  ஆட்சியை தோற்கடித்து பாஜ முதல்முறையாக வெற்றி பெற்றது.  இந்த தேர்தலில் ஆளும் பாஜவை தோற்கடிக்க மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

திரிபுரா மாநில திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பிஜூஸ் காந்தி பிஸ்வாஸ் கூறுகையில், ‘‘ மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கூட்டணியில் திரிணாமுல் கட்சி சேராது. மார்க்சிஸ்ட் ஆட்சியின் போது பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இந்த கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கட்சி வலுவான இடங்களில் திரிணாமுல் போட்டியிடும்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த மாதம் 2 நாள் பிரசாரம் செய்வார்’’ என்றார்.

Tags : Mamata ,Tripura ,Trinamool Congress , Mamata's party won't join opposition alliance in Tripura: Trinamool Congress announcement
× RELATED மேற்கு வங்கத்தில் கெத்து காட்டிய மம்தா