×

வேதையில் கடல் சீற்றம் 5 ஆயிரம் மீனவர்கள் முடங்கினர்

வேதாரண்யம்: கடல்   சீற்றமாக காணப்படுவதால் நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை,  புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ  கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று  மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தங்களது பைபர் படகு மற்றும்  மீன்பிடி வலைகளை கரையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வெளியூர் மீனவர்களும்  மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளிலே முடங்கிப் போய் உள்ளனர். இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.


Tags : Vedai , 5000 fishermen were paralyzed by sea rage in Vedai
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...