×

ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க கோரி அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்திப்பு..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க கோரி  பாஜவுக்கு அதிமுகவினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு பழனிசாமி ஆதரவாளர்கள் தங்கமணி, ஜெயக்குமார் வருகை தந்துள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து பழனிசாமி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக போட்டியிடுவது உறுதியான நிலையில் பாஜக போட்டியிடுமா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

Tags : Edappadi ,Palanisamy Party ,Annamalai ,Erode ,East Constituency , Erode East Block, Annamalai, Edappadi Palaniswami side
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்