×

வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை

சென்னை: சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள்  மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறித்து புகார் கூறப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதன் அடிப்படையில், அமைச்சர் சிவசங்கர் உத்தரவின்படி சாலையோர உணவகங்களின் செயல்பாட்டினை கடந்த 2 நாளாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் (19ம் தேதி) போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் சாலையோர உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட சாலையோர பிற உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டால், அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.

Tags : Wales Travel Route , Government buses are prohibited from stopping at the Wales Route Restaurant
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...