×

மிஷன் சக்தி திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: ஒடிசா சென்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்ட உலக தரம் வாய்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டு, இளைஞர்களை தேர்வு செய்தல், திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல், பல்வேறு நாடுகளில் இளைஞர்களை பணியமர்த்துதல் போன்ற செயல்பாடுகள்  குறித்து கேட்டறிந்தார்.

ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டம் எவ்வாறு மாபெரும் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பது குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்தாலோசித்தார். மிஷன் சக்தி திட்டத்தினை ஒடிசா மாநிலத்தின் அனைத்து துறைகளும் எவ்வாறு இணைந்து செயல்படுத்துகின்றன என்பதை ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா விளக்கினார். அப்போது இத்திட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

நிகழ்வில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags : Minister ,Udayanidhi Stalin , Consultation with officials of Minister Udayanidhi Stalin on Mission Shakti Project activities
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...