பட்ஜெட் தகவல் கசிவு? நிதி அமைச்சக ஊழியர் கைது

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சக அலுவலகத்தில் இருந்து முக்கிய தகவல்களை கசியவிட்டதாக பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சகத்தில் டேட்டா ஆபரேட்டராக பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் அமித் என்பதை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வேவு பார்க்கும் வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த இவர், நிதி அமைச்சகத்தின் முக்கிய தகவல்களை கசிய விட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறி உள்ளனர். நிதி அமைச்சகத்தின் முக்கிய தகவல்களை தர அமித் பணம் பெற்றுள்ளார். பட்ஜெட் பணிகள் நடந்து வரும் நிலையில், ஒன்றிய நிதி அமைச்சகத்திலிருந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: