ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் - ஓபிஎஸ் அவசர ஆலோசனை..!

சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் பிரதான கட்சிகளாக விளங்கும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வேட்பாளர் குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூட்டணி கட்சிகளுடன் விவாதித்து வந்தன. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

ஓரிரு நாளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அதிமுகவில் எடப்பாடி  பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்குமான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 23ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: