லாகூர் சிறையில் இருந்து வீடியோ ரிலீஸ்; பின்லேடனை நான் சந்திக்கவில்லை!: இந்தியா மீது சர்வதேச பயங்கரவாதி ஆவேசம்

இஸ்லாமாபாத்: நான் பின்லேடனை சந்திக்கவில்லை என்று லாகூர் சிறையில் இருந்து சர்வதேச பயங்கரவாதி அப்துல் ரெஹ்மான் மக்கி வீடியோ வெளியிட்டுள்ளான். மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவனும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவனுமான அப்துல் ரெஹ்மான் மக்கி (68) என்பவன், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவனை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்தது. இந்நிலையில் அவன் லாகூர் சிறையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில், ‘எனக்கும் அல்-கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்ததின் பின்னணியில் இந்தியா உள்ளது.

ஒசாமா பின்லேடன், அய்மான் அல்-ஜவாஹிரி போன்றோரை நான் சந்திக்கவில்லை. பயங்கரவாதம்  மற்றும் வன்முறைகளை கண்டிக்கிறேன். காஷ்மீர் தொடர்பான விசயத்தில் பாகிஸ்தான்  அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன். என்னை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த விவகாரத்தில், உரிய செயல்முறைகள் பின்பற்றப்படவில்லை; எனக்கு தகவலும் அளிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளான்.

Related Stories: