×

அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள அட்லஸ் ரோபோ: 540 டிகிரியில் சுழன்று வியக்க வைக்கும் அசத்தல் வீடியோ வெளியீடு

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாகியுள்ள ரோபோ தனது புதிய திறமைகளை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பாஸ்டன் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கிய ரோபோ அட்லஸ் மனிதர்கள் போன்று உடல் அசைவுகளுடன் இந்த ரோபோ வடிவடைக்கப்பட்டுள்ளது. இது தனது புதிய அசைவுகளை செய்து காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

கனமான பொருட்களை தூக்குவது, குதிப்பது போன்ற செயல்களை செய்து ரோபோ அசத்தும் விடியோவை பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இறுதியாக 540 டிகிரியில் அந்த ரோபோ சுழன்ற காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. 5 அடி உயரம், 86 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ பேட்டரியில் செயல்படுகிறது. இதனுள் 3 கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரோபோக்களின் உடல் அசைவுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. 


Tags : Atlas , American, Atlas, Robot, Video, Release
× RELATED குளித்தலையில் முதுகு தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம்