×

சம்மேள தலைவர் பிரிஜ்பூஷண் ஷரண் சிங் பதிவி விலக நெருக்கடி: ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம்..!

டெல்லி: தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் மூத்த பயிற்சியாளர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்பதால் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். பாஜக எம்.பி.யும், தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ்பூஷண் ஷரண் சிங் மற்றும் மூத்த பயிற்சியாளர்களுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரிஜ்பூஷண் ஷரண் சிங்கை பதவி நீக்கம் செய்ய கூறியும் பயிற்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் 3-வைத்து நாளாக போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேரில் சந்தித்தனர். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த பதில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடர முடிவு எடுத்துள்ளனர். இதற்கிடையே பாஜக எம்.பி.பிரிஜ்பூஷண் தன்னிடம் கேள்வி எழுப்பிய மல்யுத்த வீரர் ஒருவரை மேடையில் வைத்து தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  


Tags : Sammela ,President ,Brijbhushan ,Sharan Singh Badivi ,Jandar Mandar , Sammela, Brijbhushan, Padhivi, Jandar, Mandar, Mylyuttha, Veernakanei, Aghturi
× RELATED பாஜக மாவட்ட துணை தலைவரை தாக்கிய வழக்கில் பாஜக ஒன்றிய தலைவர் கைது