மதுரை: மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐயை அரிவாளால் வெட்ட முயன்றும், வெடிகுண்டுகளை வீசியும் கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலைய எஸ்ஐ அழகுமுத்து மற்றும் காவலர்கள் நாகசுந்தர், கணேஷ் பிரபு, பிரபாகர் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு மாடக்குளம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அதிலிருந்து மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி கூல் மணி என்கிற மணிகண்டன் இறங்கினார். அவருக்கும், எஸ்ஐக்கும் ஏற்கனவே விரோதம் இருந்துள்ளது. தன் மீது வழக்கு பதிந்தது குறித்து கேட்டு எஸ்ஐயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.