×

பிரெஞ்சு தூதரகம் அருகே பறந்த 2 டிரோன்கள்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் தலைமை செயலகம், கவர்னர் மாளிகை, டிஜிபி அலுவலகம், சட்டசபை வளாகம், அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. இதன் அருகே பிரெஞ்சு தூதரகம் உள்ளது. இதனிடையே இன்று காலை 8 மணியளவில் சுமார் 20 நிமிடங்களாக இந்த 2 கட்டிடங்களுக்கு மேலேயே 2 டிரோன் கேமராக்கள் வட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரெஞ்சு தூதரக காவலர் பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பறந்து கொண்டிருந்த 2 டிரோன் கேமராக்களும் மாயமாகிவிட்டது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : French Embassy , 2 drones flew near French Embassy: Puducherry stirs
× RELATED நைஜரில் பிரெஞ்சு தூதரகம் மீது தாக்குதல்