ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் எம்மா ராடுகானுவை வீழ்த்தினார் அமெரிக்காவின் கோகோ காப்: 6-4 , 7-6 என்ற நேர் செட்களில் கோகோ காப் அபார வெற்றி..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பிரிட்டனின் எம்மா ராடுகானுவை வீழ்த்திய அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்பனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் பிரிட்டனின் எம்மா ராடுகானுவை எதிர்கொண்டு விளையாடினார்.

இருவருமே சம பலம் வாய்ந்த வீராங்கனைகள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும் தனது அதிரடி ஆட்டத்தால் வெற்றியை தன் பக்கம் திருப்பினார் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் இறுதியில் 6-4 ,7-6 என்ற நேர் செட்டுகளில் எம்மா ராடு கானுவை தொடரிலிருந்து வெளியேற்றினர் கோகோ காப் இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3 வது சுற்றில் தனது இடத்தை கோகோ காப் உறுதிசெய்துள்ளார்.

Related Stories: