×

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை 2வது நாளாக தொடங்கியது..!!

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை 2வது நாளாக தொடங்கியது. முதல் நாளான நேற்று திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜிடம் 8 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. கலைவாணன், செந்தில், திலீப் ஆகிய மூவரும் உண்மை கண்டறியும் சோதனைக்காக இன்று ஆஜராகியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. டெல்லியில் இருந்து வந்துள்ள தடயவியல் நியுணர்கள் சோதனை நடத்துகின்றனர். நேற்று உண்மை கண்டறியும் சோதனைக்காக ஆஜரான சத்யராஜ் இன்று 2வது நாளாக ஆஜராகிறார். சுரேந்தர் என்பவரும் சோதனைக்கு இன்று ஆஜராக உள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கின் பின்னணி:

தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். முள் கம்பிகளால் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் அழுக்குத்துணி திணிக்கப்பட்டு கொடூரமான முறையில் அவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. எந்த துப்பும் கிடைக்காத நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை.

இதனையடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாத நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சந்தேகப்படும்படியான 13 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி தற்போது 4 பேரிடம் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags : Minister ,KN Nehru ,Ramajayam , Ramajayam murder case, fact finding test
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...