×

ராகுல் யாத்திரை இமாச்சலில் நுழைந்தது

சிம்லா: ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரை நேற்று காலை இமாச்சலப்பிரதேசத்தில் நுழைந்தது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ம் தேதி ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். பல்வேறு மாநிலங்களின் வழியாக தொடர்ந்த இந்த யாத்திரை பஞ்சாபில் இருந்து நேற்று காலை இமாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைந்தது. இந்தோரா அருகே மான்செர் சுங்கசாவடியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாது திரண்டு இருந்து ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை யாத்திரைக்கு வரவேற்பு அளித்தனர். யாத்திரையின்போது ராகுலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ராகுல்காந்தி பொதுமக்களுடன் குறிப்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடியபடி யாத்திரையை மேற்கொண்டார்.


Tags : Rahul yatra ,Himachal , Rahul Yatra, Himachal, entered
× RELATED பரபரப்பான இமாச்சல் இடைத்தேர்தல் முடிவு