×

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம்

வாஷிங்டன்: உலக பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில், பல முன்னணி நிறுவனங்களும் செலவை குறைக்க தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டிவிட்டர் நிறுவனம் தனது 50% பணியாளர்களை நீக்கியது. அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டன. அந்த வரிசயைில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘மொத்த பணியாளர்களில் 5 சதவீதம் அதாவது 10,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சில பணிநீக்கங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன’ என தெரிவித்துள்ளது.

Tags : Microsoft , 10,000 layoffs at Microsoft
× RELATED நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில்...