×

தமிழ்நாடு, தமிழகம் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு, தமிழகம் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பல்வேறு அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் பேசுகையில், டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என குறிப்பிட்டது குறித்து கேட்கப்பட்டது . அதற்கு தமிழிசை, ‘ துணை நிலை ஆளுநர் இருக்கும் மாநிலங்களில் முதல்வர்கள் அப்படி தான் கூறுகிறார்கள்.

துணை நிலை ஆளுநராகிய நாங்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறோம். கையெழுத்திட ஒரு கோப்பு வந்தால் , அதில் உள்ள திட்டங்கள் மக்களுக்கு பயன்படுமா என பார்க்கிறோம் என குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், தமிழ்நாடு, தமிழகம் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் பல தலைவர்களின் போராட்டங்களுக்கு பிறகு கிடைத்தது. அதனால் தமிழ்நாடு என்ற பெயரை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. என குறிப்பிட்டார். நல்ல கருத்தை யார் சொன்னாலும் நான் ஏற்பேன் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

Tags : Tamil Nadu ,Deputy Governor of Puducherry , There is not much difference between the two words Tamil Nadu and Tamil Nadu: Puducherry Lt Governor Tamilisai Soundararajan
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...