×

பீதியை கிளப்பும் கொடிய வைரஸ்: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67.18 கோடியாக அதிகரிப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.18 கோடியாக அதிகரித்துள்ளது
 உலகம் முழுவதும் 671,836,029 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,733,341 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 643,265,537 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,837,151 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 103,614,411 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,125,895 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 100,492,975 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Deadly virus causing panic: The number of corona cases worldwide has increased to 67.18 crore
× RELATED தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி...