×

விழுப்புரம் அருகே துணிகரம் வெடிகுண்டு வீசி ஊராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்: பணம் பறிக்க முயன்ற 2 ரவுடிகள் சிக்கினர்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே எஸ். மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கபிலன்(28). இவரது நண்பர் புதுச்சேரி நெல்லித்தோப்பை சேர்ந்த கவுதமன். ரவுடிகளான இருவரும் நேற்றுமுன்தினம் எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவியிடம் பொங்கல் செலவுக்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் பணம் இல்லை என்று மறுத்ததால், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். மேலும் கவுதமன், சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவியிடம், பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பித்து வந்த அவர், வளவனூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து வீச்சரிவாள், ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Vilappuram , Near Villupuram, Vadhakaram hurled a bomb and threatened to kill the Panchayat Chairperson: 2 raiders caught trying to extort money
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது