×

வேர்க்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எஸ்.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய ஒன்றரை வயது குழந்தை தீபக் வேர்க்கடலை சாப்பிட்டுள்ளான். இது தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து எலவனாசூர் போலீசில் உறவினர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


Tags : A one-and-a-half-year-old child died after a peanut stuck in his throat
× RELATED பாலியல் குற்றங்களில் இருந்து...