×

போலி செய்திகளை பரப்பிய 6 யூடியூப் சேனல்களுக்கு தடை: ஒன்றிய அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: போலி செய்திகளை பரப்பிய 6 யூடியூப் சேனல்களுக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்பாக சில யூடியூப் சேனல்களில் போலி செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. அந்த செய்திகளின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேற்கண்ட சில யூடியூடிப் சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட செய்திகள் யாவும் போலி என உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘போலி செய்திகளை பரப்பிய நேஷன் டிவி, சம்வத், சரோகர் பாரத், நேஷன் 24, ஸ்வர்ணிம் பாரத், சம்வத் சமாச்சார் உள்ளிட்ட 6 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த யூடியூப் சேனல்கள்  சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன. இவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் 51 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் மூன்று யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : YouTube ,Union ministry , 6 YouTube channels banned for spreading fake news: Union ministry notice
× RELATED யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்