×

நெல்லை - தாம்பரத்துக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்கள் வழியாக 4 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக மேலும் சிறப்பு  ரயில் வேண்டும் என பயணிகள் ேகாரிக்கை விடுத்தனர். இதையடுத்து தாம்பரம் -  நெல்லை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  தாம்பரம் - நெல்லை (எண்.06049) அதிவேக சிறப்பு ரயில் நாளை (14ம் தேதியன்று)  சனிக்கிழமை இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு, மறுதினம்  ஞாயிற்று கிழமை அதிகாலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த சிறப்பு  ரயில் (எண்.06050) மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து வரும் 18ம் தேதி  புதன்கிழமை மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் வியாழன் காலை 4.10  மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயிலில் 3 அடுக்கு ஏசி பெட்டிகள்  இரண்டும், 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகளும், 6  பொதுப்பெட்டிகளும் இடம் பெற்றிருக்கும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு,  விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர்,  கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயில்களுக்கான  முன்பதிவுகள் இன்று(13ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.



Tags : Nellai ,Tambaram , One More Special Train for Nellai - Tambaram: Southern Railway Announcement
× RELATED ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் சிக்கிய...