×

ஐகோர்ட்டில் 62 பேர் மூத்த வழக்கறிஞர்களாக அறிவிப்பு

சென்னை: கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் 3 பேர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட 62 வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி மூத்த வழக்கறிஞர்களாக தங்களை அறிவிக்க கோரி 130க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர். இவர்களிடம் நடந்த நேர்காணல் உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் 81 வழக்கறிஞர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் பரிசீலிக்கப்பட்டன.  இவர்களில் 62 பேர் இறுதியாக மூத்த வழக்கறிஞர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

அதில், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், பி.குமரேசன், ஆர்.பாஸ்கரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், என்.சந்திரசேகரன், என்.ஜோதி, சி.டி.மோகன், வி.ராகவாச்சாரி, ஜி.கார்த்திகேயன், மதுரை ஆர்.காந்தி டி.மோகன், ஜி.சங்கரன், ஜான் சத்தியன், அபுடுகுமார் ராஜரத்தினம் உள்ளிட்ட 62 பேர் மூத்த வழக்கறிஞர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற பதிவாளர் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : 62 senior advocates announced in ICourt
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...