×

கண்களை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறை விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு

சென்னை: கண்களை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறை விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி, கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, கண்களை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறை விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படும்.

நியாய விலைக்கடைகளில் கைரேகை மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால் குடும்ப அட்டைதாரரின் கண் கருவிழி மூலமாக ஸ்கேன் செய்து பொருள் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருவிழி மூலம் பொருள் விநியோக திட்டத்தை செயலாக்க டெண்டர் விடப்படும். பரிசோதனை முயற்சியாக நகர்புறம், கிராமப்புறங்களில் தலா ஒரு ரேஷன் கடைகளில் புதிய முறை அமல்படுத்தப்படும். நியாயவிலைக் கடைகளில் வழங்கக்கூடிய அரிசி, சர்க்கரை, கோதுமை பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை எனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


Tags : Minister ,Chakrapani , Eye, Scan, Goods, Ration Shop, Minister Chakrapani
× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக...