வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் விவகாரம் ஐகோர்ட்டில் இன்று மதியம் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 11 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 9ம் தேதி நடந்த தேர்தல் வாக்கு சீட்டுகள் வெளியே சென்றதால் எழுந்த தகராறு ஏற்பட்டதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரியும் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். நீதிபதிகள் வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: