×

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

டெல்லி: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். முன்னாள் அமைச்சர் கிம்மனே ரத்னாக்கர் அலுவலகத்தில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார். மங்களூரு நகரில் நடந்த ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாரிக்கிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சாரிக் சொந்த ஊரான சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றிய கிம்மனே ரத்னாக்கர் அலுவலகத்தில் காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிம்மனே ரத்னாக்கர் வாடகைக்கு எடுத்துள்ள அலுவலகம் தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள சாரிக்கின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தாங்கள் இந்த கட்டிடத்தை 2015 ஆம் ஆண்டு 10 லட்சம் முன்தொகை கொடுத்து மாதம் 10 ஆயிரம் வாடகை என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுத்ததாகவும் இந்த விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் தாங்கள் வழங்கியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் கிம்மனே ரத்னாக்கர்  தெரிவித்துள்ளார்.

Tags : NIA ,Congress ,Mangaluru , NIA officials raid the former Congress minister's office in the Mangaluru cooker blast case
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...