×

'ஆளுநர் உரையில் உள்ள அனைத்திற்கும் அமைச்சரவையே பொறுப்பு': அவையின் மாண்பை காக்க மதிநுட்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டார்.. சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!!

சென்னை: ஆளுநர் உரை நிகழ்வின் போது தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பட்டால் அனைத்து சட்டப்பேரவைகளின் மாண்பும் காக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து சபாநாயகர் அப்பாவு சபையில் விளக்கம் அளித்தார். ஆளுநர் உரையில் இல்லாத அம்சங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தபோது அதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அப்பாவு சுட்டிக்காட்டினார். எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களை முதலமைச்சர் அமைதிப்படுத்தினார் என்றும் குறிப்பிட்ட அவர், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அனைத்திற்கும் அமைச்சரவையும், அரசும் தான் பொறுப்பு என்று விளக்கம் அளித்தார். எனவே அவையின் மாண்மை காக்கும் விதமாக முதலமைச்சர் மிகவும் மதிநுட்பத்துடன் செயல்பட்டார் என்றும் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சரின் செயலால் தமிழ்நாடு சட்டப்பேரவை மட்டுமல்லாது, அனைத்து சட்டப்பேரவைகளின் மாண்பும் காக்கப்பட்டுள்ளதாக அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற நிகழ்வுகள் இனி அவையில் நிகழாது என்று சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார். அதேநேரம் ஆளுநர் உரையின்போது காங்கிரஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிற்கு சென்று முழக்கமிட்டதை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் அப்பாவு குறிப்பிட்டார். இனிமேல் ஆளுநருக்கு எதிராக எந்த உறுப்பினரும் பேச வேண்டாம் என்றும் சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Chief Minister ,Stalin ,House ,Speaker ,Appavu , Governor's Speech, His Excellency, Prime Minister Stalin, Speaker Appa
× RELATED மே தினத்தை ஒட்டி முதலமைச்சர்...