இளையான்குடி : இளையான்குடி தாலுகாவில் நெல் சாகுபடி பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இளையான்குடி தாலுகாவில் நடப்பாண்டில் சுமார் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு உழவு, விதை நெல், களையெடுப்பு, உரம் ஆகியவை சேர்த்து ரூ.20 ஆயிரம் வரை நெல் விவசாயிகள் செலவு செய்தனர்.
கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் 11 பெய்த வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் மற்ற பல இடங்களில் நல்ல மழை பெய்தாலும், இளையான்குடி தாலுகாவில் வழக்கத்தைவிட குறைந்த அளவிலேயே பெய்தது. இதனால் மழை இல்லாமல் விவசாய நிலங்கள் வறண்டு நெற்பயிர்கள் அனைத்தும் கருகியது.இதனால் நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. எனவே ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளையான்குடி வட்டார நெல் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.