×

அரசின் உரையைப் படிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் மரபுகளை மீறிவிட்டார்: தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவை மரபுகளை மீறிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறியதாவது:  ஆளுநர்கள் மாநிலத்தின் பாதுகாவலர்கள். அவர்களின் அரசியலமைப்பு கடமையை நடுநிலையோடு நிறைவேற்ற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் திங்கட்கிழமை ஆளுநர் ஆற்றிய உரையில் அரசு தயாரித்த அறிக்கையில் இருந்த சில பகுதிகளை புறக்கணித்துள்ளார். புதிதாக அறிக்கையில் இல்லாத சொந்த கருத்துக்களையும் சேர்த்து படித்துள்ளார். ஆளுனர் தானாக குறிப்பிட்ட ஒவ்வாத அனைத்து கருத்துகளையும் பதிவுகளில் இருந்து நீக்க கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.
 
அரசு தயாரித்த உரையைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும். இதுதான் மரபு. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் அந்த மரபை மீறி செயல்பட்டுள்ளார். ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. ஒருமுறை நியமிக்கப்பட்டால் அவர்கள் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் தாங்கள் சார்ந்த கட்சியை நிலை நிறுத்தக் கூடாது. வர்னர்கள் ஒரு மாநிலத்தின் பாதுகாவலர்கள் மற்றும் அவர்களின் அரசியலமைப்பு சட்டத்தின் படி நடுநிலையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் அவரது அந்தஸ்துக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் உகந்ததாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,NCP , Tamil Nadu governor broke tradition by not reading state speech: NCP alleges
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...