×

எதிர்கட்சி துணை தலைவர் விவகாரம்: சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும்.! ஓபிஎஸ் பேட்டி

சென்னை: சட்டபேரவை எதிர்கட்சித்துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை, தலைமை செயலகம் சட்டபேரவை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் மறைந்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

அத்துடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும். ரிமோட்  வாக்குபதிவு முறை குறித்த கருத்து கேட்பு  கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய அழைப்புக்கு அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என முடிவு செய்து அறிவிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Deputy Leader ,OPS , The matter of the Deputy Leader of the Opposition: The Speaker should take the decision. OPS interview
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி