'விடுமுறை கிடைக்காததால் மனைவி என்னுடன் பேசுவதில்லை': உத்தரப்பிரதேச மாநில காவலரின் நூதன விடுப்பு விண்ணப்பம்

உத்தரப்பிரதேசம்: மனைவி கோபமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு விடுமுறை கேட்ட உத்தரப்பிரதேச காவலரின் விடுப்பு விண்ணப்பம். உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நௌதன்பா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் அவர் எழுதிய  விடுப்பு விண்ணப்பத்தில் தனக்கு ஏற்கனவே விடுமுறை கிடைக்காததால் கோபமான தனது மனைவி போன் செய்யும் பொது தன்னுடன் பேசுவதில்லை என்று புலம்பி இருக்கிறார்.

அத்துடன் பலமுறை மனைவிக்கு போன் செய்ததாகவும் ஆனால் அவர் தன் தாயிடம் போனை கொடுத்துவிட்டதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது தனது உறவினரின் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வருவதாக மனைவிக்கு உறுதியளித்து விட்டதாகவும். விடுமுறை கிடைக்காவிட்டால் வீட்டுக்கு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டு விடுப்பு கேட்டுள்ளார் அந்த காவலர். இந்த விண்ணப்பத்தை படித்த உதவி கண்காணிப்பாளர் காவலருக்கு ஜனவரி 10 முதல் 5 நாட்களுக்கு சாதாரண விடுப்பு வழங்கி இருக்கிறார். 

Related Stories: