கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி!: நாமக்கல்லில் நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.. கோழிப் பண்ணைகளில் கிருமிநாசினி தெளிப்பு..!!

நாமக்கல்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி இருக்கும் நிலையில், நாமக்கல் கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த அழூரில் பறவை காய்ச்சல் தாக்கம்  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பெருமாங்குழி பகுதியில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து சுமார் 2 ஆயிரம் கோழி, வாத்துகளை அழிக்க அம்மாநில நோய் தடுப்பு துறை முடிவெடுத்துள்ளது. நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு தினசரி 1 கோடி முட்டைகள் மற்றும் அதிகளவில் கோழிகள் அனுப்பப்படுவதால் முன்னெச்சரிக்கை கருதி நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோழி பண்ணை வாசலில் பொட்டாஷியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைப்பதற்கு கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பெரும்பாலான பண்ணைகளில் வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமி நாசினி தெளித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

Related Stories: