திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஆர்ஜித சேவைகளில் கல்யாண உற்சவம், ஆர்ஜித  பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவையில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க முடியாது. இருப்பினும், இந்த டிக்கெட்டுகளை வைத்து பக்தர்கள் தாங்கள் விரும்பிய தேதியில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம். பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை ஏழுமலையான் கோயில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலைய கோபுர தங்க தகடுகள் பதிக்கும் பணிக்காக பாலாலயம்  பூஜைகள் நடைபெற உள்ளது. இதனால், அன்றைய நாட்களில் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: