ஆளுநரை சங்பரிவார் இயக்குகிறது தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது: வைகோ ஆவேசம்

நெல்லை: ‘தமிழ்நாடு என்ற பெயர் இலக்கியங்களிலேயே உள்ளது, தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது’ என வைகோ தெரிவித்து உள்ளார். நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: அண்ணா முதல்வரான பிறகு நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார். தமிழ்நாடு என்ற பெயரே இலக்கியங்களில் இருக்கிறது.  எனவே இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டு நான் தமிழ்நாடு என்று சொல்வேன் என அண்ணா கூறினார். காங்கிரஸ் கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் அண்ணா ‘தமிழ்நாடு’ என்று சொல்ல, ‘வாழ்க’ என்று 3 முறை தெரிவித்தனர். இந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தோடு செயல்படுகிறார். சங்பரிவார் சக்திகள் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களது கருவியாக, அவர்களின் போலித்தனமான ஏஜென்டாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்றதாகும். தியாகத்தால் சூட்டப்பட்ட பெயராகும். இவ்வாறு வைகோ தெரிவித்தார். 

Related Stories: