எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதிய ‘காவிரி நீரோவியம்’ என்ற நூலினை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார்

சென்னை: எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதியுள்ள ‘காவிரி நீரோவியம்’ என்ற நூலினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். உயிர்மை பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் சூர்யா சேவியர் காவிரி நீரோவியம் என்ற நூலினை எழுதியுள்ளார். இந்த நூலினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் வெளியிட்டார்.  

மேலும், நூலிற்கான முதல் பிரதியினை தமிழ்நாடு கொள்கை வளர்ச்சி குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், கவிஞர் யுகபாரதி, வழக்கறிஞர் அருள் மொழி ப்ரன்ட்லைன்  முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர், பத்திரிகையாளர் ஜென்ராம், கல்வெட்டு ஆய்வளர் பத்மாவதி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் புத்தக பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன், நூல் ஆசிரியர் சூர்யா சேவியர் உடனிருந்தனர். இவர் கடந்த 2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சொல்லின் செல்வர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: