×

காதல் பற்றி பேச மறுக்கும் தமன்னா

மும்பை: தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் திரைப்படங்கள் மற்றும் டி.வி நிகழ்ச்சி, வெப்தொடர், விளம்பரங்கள் என்று பிசியாக நடித்து
வருபவர், தமன்னா. இந்நிலையில் அவரும், பாலிவுட் இளம் நடிகர் விஜய் வர்மாவும் நெருக்கமாக இருக்கும் சில போட்டோக்கள் சமூக வலைத்
தளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை தமன்னாவும், விஜய் வர்மாவும் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் தமன்னா வெளியிட்டுளள ஒரு வீடியோவில், ‘தினமும் சந்தனம், காபி தூள், தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால், நம் முகம் பளபளவென்று இருக்கும். தயிர் மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் மேலும் சருமம் அழகாக மாறும். இந்த டிப்ஸ்களை தினமும் பின்பற்றுங்கள். இதை என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தார். இதுதான் என் அழகு ரகசியம்’ என்று கூறியுள்ளார். காதல் பற்றி தமன்னா ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தால், இப்படி அழகு குறிப்புகள் சொல்கிறாரே என்று நெட்டிசன்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Tamanna , Tamanna refuses to talk about love
× RELATED வாரணாசியில் தமன்னா படப்பிடிப்பு