×

தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

சிவகங்கை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிவகங்கையில் நேற்று அளித்த பேட்டியில், ‘தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் எல்லா நிலையிலும் ஆரோக்கியமானதாக இருந்து வருகிறது. ஆங்காங்கே ஒரு சில சங்கங்களின் நஷ்டங்கள் எதிர்காலத்தில் சரி செய்யப்படும். நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநர் சீண்டிப் பார்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்கான விளைவுகளை அவர் விரைவில் அறுவடை செய்வார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நூல்களிலும், சங்க இலக்கியங்களிலும் தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Minister ,K.R.Periyagaruppan , Steps are being taken to open paddy procurement centers at all necessary places in Tamil Nadu: Minister K.R.Periyagaruppan informs
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...