×

டயர் முன்பாக விழும் தலைவர்கள் எடப்பாடி, ஓ.பிஎஸ்சை விமர்சித்த அண்ணாமலை: சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது

சென்னை: அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விமர்சித்து அண்ணாமலை பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாஜ இடையே மோதல் உருவானது. தேர்தலுக்கு பிறகு பாஜவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வியை சந்திக்க நேரிட்டது என்று அதிமுக தலைவர்கள் பலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் எதிர்ப்பார்த்த இடங்களில் பாஜவால் வெற்றி பெற முடியவில்லை என்று பாஜ தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர்ந்து அதிமுக, பாஜவில் உள்ள தலைவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்து கொண்டே உள்ளனர். அதே நேரத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அரசியல் கட்சியினர் இப்ேபாதே தயாராகி வருகின்றனர்.
 
அதே நேரத்தில் அதிமுக, பாஜவில் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் இப்போதே மோதல் உருவாகியுள்ளது. அதிமுக எங்கள் தலைமையில் கூட்டணி என்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை இதுவரை பாஜ வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜ விழாவில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பட்டும் படாமல் தான் தெரிவித்தார். அவர் அறிவித்த சில நிமிடங்களில் அண்ணாமலை அதிமுகவை பேட்டியின் போது  மறைமுகமாக தாக்கி தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த பேட்டியில், ‘‘தமிழ்நாட்டில் அந்த மாதிரி பார்க்கிறீங்க. காலில் விழுந்து, டயரில் விழுந்து, வீட்டிற்கு வெளியில் இருந்து’’ என்று தெரிவித்துள்ளார். அதாவது, ஜெயலலிதா இருந்தபோது அவர் செல்லும்போது அவர் கார் முன்பாக விழுந்து முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் செல்லும் போது ஹெலிகாப்டரை பார்த்து வணங்கினர். அப்படியிருக்கும் போது அண்ணாமலை மறைமுகமாக அதிமுக தலைவர்களை தான் இப்படி விமர்சித்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Tags : Edappadi ,Annamalai , Leaders falling before tires Edappadi, Annamalai criticized OPS: going viral on social media
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்