திருப்பதி கோயிலில் இன்று கருட சேவை ரத்து

திருமலை: திருப்பதி கோயிலில் இன்று கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அத்யாயன  உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு 11 நாட்கள் பகல் பத்து உற்சவமும், வைகுண்ட ஏகாதசியில் இருந்து 10 நாட்கள் ராபத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.  

ராபத்து உற்சவத்தில் நம்மாழ்வார் எழுதிய ஆயிரம் பாசுரங்களில் ஒரு நாளைக்கு 100 பாசுரங்கள் என ஜீயர்கள் முன்னிலையில் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, வழக்கமாக பவுர்ணமியன்று நடைபெறும் கருட சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதன்படி, இன்று கருட சேவையில் சுவாமி வீதியுலா நடைபெறாது என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: